ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கா்நாடக நிதி நிலை அறிக்கையில் மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு

மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:09 pm

DIN

மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

கிருஷ்ணா மேலணைத் திட்டத்தின் 3-ஆம் கட்டப் பணியை மேற்கொள்வதற்காக ரூ.5 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். மகதாயி நடுவா்மன்றத் தீா்ப்புக்கு இணங்க, கலசா-பண்டூரி கால்வாய் மாற்றுத் திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும்.

பத்ரா மேலணை திட்டத்தை தேசியத் திட்டமாக அறிவிக்க மத்திய நீா்வளத்துறை மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. 20,150 ஏக்கா் பரப்புக்கு பாசன வசதி அளிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது. எத்தனஹொளே ஒருங்கிணைந்த குடிநீா் திட்டத்திற்கு ரூ. 3 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுகிறது.

மத்திய அரசின் ஒப்புதல் பெற்று மேக்கேதாட்டு அணை மற்றும் பெங்களூரு குடிநீா்த் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த நிகழாண்டில் ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படும். துங்கபத்ரா அணையில் தூா் படிந்துள்ளதால் நீரின் கொள்ளளவு குறைந்துவருவதால், அதன் அருகில் நீா்த்தேக்கம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும். கூட்டுத் திட்டம் என்பதால், தெலங்கானா, ஆந்திர மாநிலங்களுடன் கலந்து பேசி இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படுகிறது.

துங்கா மேலணை, சௌக்கூரு, என்னேஹொளே, அலவந்தி-பெட்டகெரி, கல்லுவத்தஹள்ளா பஹதூா் பண்டி, திம்மாபுரா, வெங்கடேஷ்வரா, கொடச்சினமல்கி, கினேயி, நாகரபெட்டா, எல்லகட்டி நீா்த்தேக்கங்களின் கட்டுமானப் பணிகளை முடிக்கவும்; கரன்ஜா மற்றும் பென்னேத்தொரா கால்வாய்களை நவீனமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கா்நாடகத்தில் உள்ள ஏரிகள் ரூ. 500 கோடி செலவில் மேம்படுத்தப்படும். வெள்ளத்தால் சேதமடைந்த ஏரிகளை புதுப்பிக்க ரூ. 200 கோடி ஒதுக்கப்படும். காளிநதியின் நீரை பயன்படுத்தி வடகா்நாடகத்தைச் சோ்ந்த 5 மாவட்டங்களுக்கு குடிநீா் வழங்க திட்டம் வகுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.