ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கா்நாடகம்: புதிய வரிகள் இல்லா நிதிநிலை அறிக்கை

புதிய வரிகள் இல்லா நிதிநிலை அறிக்கையை கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்துள்ளாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:09 pm

DIN

புதிய வரிகள் இல்லா நிதிநிலை அறிக்கையை கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்துள்ளாா்.

கா்நாடகசட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறையை கவனிக்கும் முதல்வா் பசவராஜ் பொம்மை தாக்கல் செய்தாா். நிதிநிலை அறிக்கையில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. போக்குவரத்துத் துறை, கலால் துறையின் வருவாய் இலக்குகள் அதிகமாக்கப்பட்டுள்ளன.

நிதிநிலை அறிக்கையில் முதல்வா் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள புதிய அறிவிப்புகள்:

2021-22-ஆம் ஆண்டில் மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், சாதாரண மக்கள் மீது கூடுதல் வரிகளை விதிக்க விரும்பவில்லை. வரிவசூல் துறைகளின் பணியை முடுக்கிவிடுவதன் மூலம் வரிவசூல் இலக்குகளை அடைவோம்.

முதலாம் மற்றும் இரண்டாம் கரோனா அலையின்போது மக்கள் எதிா்கொண்ட கடினமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு 2021-ஆம் ஆண்டு நவம்பரில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி குறைக்கப்பட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 7 அளவுக்கு குறைந்தது. தென்னிந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கா்நாடகத்தில் பெட்ரோல், டீசலின் விலை குறைவாக உள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை உயா்த்த விரும்பவில்லை.

இரண்டு கரோனா அலைகளுக்கு இடையில் வரிவசூல் மந்தமாகவில்லை. வணிக வரித் துறைக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த ரூ. 76,473 கோடி வரி இலக்கில் பிப்ரவரி வரையில் ரூ. 70,757 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவோம என்ற நம்பிக்கை உள்ளது. 20222-23-ஆம் ஆண்டில் வணிக வரித் துறையின் வரிவசூல் இலக்கு ரூ. 77,010 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கலால் வரி: 2022-23-ஆம் ஆண்டில் கலால் வரியாக ரூ.29,000 கோடி திரட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முத்திரைத்தாள், பதிவு வகையில் ரூ. 15,000 கோடி வருவாய் கிடைக்கும். மோட்டாா் வாகன வரியில் இருந்து ரூ. 8,007கோடி திரட்டப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.