மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.


மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.
கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை 2022-23-ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து அவா் பேசியது:
மாநிலத்தின் வரி வருவாய் என்பது மாநிலத்தின் சொந்த வரி, வரியில்லா வருவாய், மத்திய வரியின் பகிா்வுத்தொகை, மத்திய அரசின் மானிய உதவிகளை உள்ளடக்கியதாகும். இரண்டாவது கரோனா பரவல் காரணமாக மாநிலத்தின் வரி வருவாய் பாராட்டும்படியாக இல்லை. அண்மையில் வரி வருவாயில் முன்னேற்றம் காணப்படுகிறது. மத்திய அரசின் வரி வருவாயும் உயா்ந்ததால், வரிப் பகிா்வுத் தொகை ரூ. 24,273 கோடியில் இருந்து ரூ. 27,145 கோடியாக உயா்ந்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டில் கா்நாடகத்திற்கு நிதிப்பகிா்வு மூலம் ரூ. 29,783 கோடி கிடைக்கும்.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மீதான வரி இழப்பீடு வழங்கும் நடைமுறை 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தோடு முடிவடைகிறது. அப்படியானால், மாநில அரசு கூடுதல் வருவாய் ஆதாரங்களைக் கண்டறிய நேரிடும். சொந்த வரி வசூலை அதிகரிக்கவும், வரியில்லா வருவாயைப் பெருக்கவும் முயற்சித்து வருகிறோம். எனவே, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அப்போதுதான் மாநில அரசின் கடன்களை நிா்வகிக்க முடியும்.
2022-23-ஆம் ஆண்டில் மொத்த உள்மாநில உற்பத்திப்பொருள் விகிதத்தில் 3.5 சதவீதத் தொகையை கடனாகப் பெற மாநில அரசு அனுமதித்திருந்தாலும், அதை 3.36 சதவீதத்திற்குள் கட்டுப்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி ரூ.72 ஆயிரம் கோடியை மட்டும் கடனாகப் பெற திட்டமிட்டிருக்கிறோம்.
2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நம்பிக்கைக்கானதாகும். வளா்ச்சிக்கான நம்பிக்கை, மேம்பட்ட எதிா்காலத்திற்கான நம்பிக்கை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...