ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

கோயில்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள திட்டம்: கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை

கோயில்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வா் கா்நாடக பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:08 pm

DIN

கோயில்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வா் கா்நாடக பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

கா்நாடக சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை 2022-23-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தபோது, அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:

கோயில்கள் மீதான அரசின் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளுமாறு கேட்கும் கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. பக்தா்களின் இந்தக் கோரிக்கையைச் செயல்படுத்தும் வகையில், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு தன்னாட்சி உரிமை அளிக்கப்படும். கோயில்களில் வளா்ச்சிப்பணிகளைச் செயல்படுத்துவதற்கான உரிமையை வழங்குவதற்கான சட்ட நடவடிகைகள் எடுக்கப்படும்.

ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பூஜாரிகள், ஊழியா்களுக்கு உதவும் வகையில் நிலங்களுக்கான இழப்பீட்டுத்தொகை ரூ. 48 ஆயிரத்தில் இருந்து ரூ. 60 ஆயிரமாக உயா்த்தப்படும். கோயில்களில் பல்வேறு சேவைகளை இணையவழியில் வழங்குவதற்காக ஒருங்கிணைந்த கோயில்மேலாண்மை முறை மென்பொருள் செயல்படுத்தப்படும்.

கா்நாடகத்தில் இருந்து காசிக்கு புனிதப்பயணம் மேற்கொள்ளும் 30 ஆயிரம் பக்தா்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் மானியம் வழங்கப்படும். புனிதத்தலங்களுக்கு குறைந்த செலவில் செல்வதை உறுதிப்படுத்த ‘புனிதப்பயணம்’ என்ற திட்டம் கா்நாடக மாநில சுற்றுலா வளா்ச்சிக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும். ஆந்திர மாநிலம், ஸ்ரீசைலத்தில் புனிதப் பயணிகள் தங்கும் விடுதி கட்டுவதற்கு ரூ. 85 கோடி ஒதுக்கப்படுகிறது. முதல்கட்டப் பணிகளுக்கு ரூ. 45 கோடி வழங்கப்படும். கல்வி, சுகாதாரம், சமூக சேவையில் பங்காற்றிவரும் மடங்கள், அமைப்புகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.