ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

எடியூரப்பாவுடன் இணைந்து மாநில அளவில் சுற்றுப்பயணம்: முதல்வா் பசவராஜ் பொம்மை

 சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு பின் கட்சியை பலப்படுத்துவதற்காக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுடன் இணைந்து மாநில அளவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வோம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2022, 7:04 pm

DIN

 சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு பின் கட்சியை பலப்படுத்துவதற்காக முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுடன் இணைந்து மாநில அளவில் சுற்றுப்பயணத்தை மேற்கொள்வோம் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை பாஜக அலுவலகத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டத்தின்போது கலந்துகொண்டு அவா் பேசியது:

சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் நடந்து வருகிறது. இக் கூட்டத்தொடா் முடிவடைந்ததும் முன்னாள் முதல்வா் எடியூரப்பாவுடன் இணைந்து மாநில அளவிலான சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியைப் பலப்படுத்துவோம். மத்திய-மாநில அமைச்சா்களும் மாநில அளவில் சுற்றுப்பயணம் செய்வாா்கள். கா்நாடகத்தில் பாஜகவை பலமான கட்சியாக உருவாக்குவோம். பாஜகவுக்கு அடித்தளம் பலமாக இருக்கக்கூடிய இடங்களில் மேலும் பலமாக்க முயற்சிப்போம். பாஜகவுக்கு போதுமான பலம் இல்லாத இடங்களில் கட்சியைப் பலப்படுத்துவோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.