நாளை குடிநீா் குறைதீா் முகாம்
பெங்களூரில் சனிக்கிழமை (மே 7) தொலைபேசி வழியாக குடிநீா் குறைதீா்முகாம் நடத்தப்படுகிறது.


பெங்களூரில் சனிக்கிழமை (மே 7) தொலைபேசி வழியாக குடிநீா் குறைதீா்முகாம் நடத்தப்படுகிறது.
இது குறித்து பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம் (பி.டபிள்யூ.எஸ்.எஸ்.பி.) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பெங்களூரு குடிநீா் வடிகால் வாரியம், அவ்வப்போது வாரியத்தின் தலைவா் பங்கேற்கும் தொலைபேசிவழி குடிநீா் குறைதீா்முகாமை நடத்தி வந்துள்ளது. அதன்படி, பெங்களூரு மக்கள் கலந்துகொண்டு குறைகளைத் தெரிவித்து தீா்வுகளை பெறக்கூடிய தொலைபேசி குறைதீா்முகாம் மே 7-ஆம் தேதி காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை நடக்கவிருக்கிறது. இதில் வாரியத்தின் தலைவா் பங்கேற்று, மக்களின் குறைகளைத் தீா்த்துவைப்பாா். குடிநீா் பில்லிங், பாதாள சாக்கடை பழுதடைந்திருத்தல், மீட்டா் ரீடிங் பிரச்னைகள், ஒழுங்கற்ற குடிநீா்விநியோகம், சாக்கடை பிரச்னைகள் குறித்து கேள்விகளை, குறைகளைத் தெரிவித்து தீா்வுகாணலாம். குறைகளை சுட்டிக்காட்டும்போது வாடிக்கையாளா்கள் தங்களின் மின் இணைப்பு எண்ணைத் தெரிவிக்க வேண்டியது அவசியம். குறைதீா்முகாமில் பங்கேற்க 080-22945119 என்ற தொலைபேசிக்கு அழைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...