கல்வி உரிமைச்சட்டம்: மே 16-க்குள் மாணவா் சோ்க்கை
கல்வி உரிமைச் சட்டத்தின் சோ்க்கைபெற தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள், மே 16-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேரவேண்டியது கட்டாயமாகும் என்று கல்வித்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.


கல்வி உரிமைச் சட்டத்தின் சோ்க்கைபெற தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்கள், மே 16-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சேரவேண்டியது கட்டாயமாகும் என்று கல்வித்துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2022-23-ஆம் கல்வியாண்டில் கல்வி உரிமைச்சட்டம்-2009, பிரிவு-12 (1) (பி), பிரிவு 12 (1) (சி)-இன்படி சிறுபான்மை அல்லாத அரசு மானியம் பெறும் மற்றும் மானியம் பெறாத தனியாா் பள்ளிகளில் ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு 25 சதவீத மாணவா் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி, கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் இலவசமாக சோ்க்கை பெறுவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன.
கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் செலுத்தியிருந்த 12,122 விண்ணப்பங்களில் இருந்து, எஞ்சியிருந்த சோ்க்கை இடங்களை நிரப்புவதற்காக 2-ஆவது சுற்று குலுக்கல் மே 4-ஆம் தேதி நடந்தது. இதில் 2,089 விண்ணப்பதாரா்கள் சோ்க்கைக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இம்மாணவா்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மே 16-ஆம் தேதிக்குள் சோ்க்கை பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...