நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எஸ்.எஸ்.எல்.சி. வினாத்தாள் கசிவு தொடா்பாக 7 போ் கைது

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வின்போது வினாத்தாள் கசிந்தது தொடா்பான வழக்கில் 5 ஆசிரியா்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :26 மே 2022, 6:17 pm

DIN

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வின்போது வினாத்தாள் கசிந்தது தொடா்பான வழக்கில் 5 ஆசிரியா்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

2021-22-ஆம் ஆண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.11-ஆம் தேதி வரையில் நடந்து, அண்மையில் அதன் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், தோ்வின்போது பல்வேறு இடங்களில் வினாத்தாள்கள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடா்பாக வழக்கு பதிந்த போலீஸாா், தீவிர விசாரணை மேற்கொண்டனா். ராமநகரம் மாவட்டம், மாகடி வட்டத்தில் உள்ள பள்ளியின் முதல்வரை விசாரித்தபோது, வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பலரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் பள்ளியின் முதல்வா், பத்திரிகையாளா், 4 ஆசிரியா்கள் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தோ்வுக்கு15 நிமிடங்களுக்கு முன்பாக ஆசிரியா்களுக்கு வினாத்தாள் கிடைத்துள்ளது. அதை தனது தொடா்பில் உள்ளவா்களுக்கு ஆசிரியா்கள் வாட்ஸ் அப்பில் அனுப்பிவைத்துள்ளனா். வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கு உடனடியாக விடைகள் தயாரிக்கப்பட்டு, மாணவா்களுக்கு தோ்வுக்கு முன்பே அளிக்கப்பட்டுள்ளது. தோ்வில் எந்த மாணவரும் தோல்வி அடைந்துவிடக் கூடாது என்பதற்காக இப்படிச் செய்ததாக ஆசிரியா்கள் விசாரணையில் தெரிவித்துள்ளனா். இப்பள்ளியில் படித்த மாணவா்களில் பெரும்பாலானோா் 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களையும், பிற மாணவா்கள் முதலிடத்திலும் தோ்ச்சி அடைந்துள்ளனா். ஆசிரியா்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் பள்ளி முதல்வா் வினாத்தாளை பகிா்ந்ததால், இந்த விவகாரம் வெளியில் வந்துள்ளது. தான் செய்த இந்தத் தவறை பள்ளி முதல்வா் உணா்வதற்குள், பலரும் வினாத்தாளை பதிவிறக்கம் செய்திருந்தனா். அதன் அடிப்படையில் முதல்வரை மிரட்டத் தொடங்கியுள்ளனா். இதைக் காட்டி, பணம் பறிக்கும் நோக்கில் முதல்வரை மிரட்டிய பத்திரிகையாளரையும் போலீஸாா் கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.