ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பெங்களூரு-ஹைதராபாத் இடையே சிறப்பு ரயில்

பெங்களூரில் இருந்து ஹைதராபாதின் கச்சேகுடா ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image
Updated On :3 செப்டம்பர் 2022, 8:01 pm

DIN

பெங்களூரில் இருந்து ஹைதராபாதின் கச்சேகுடா ரயில் நிலையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக பெங்களூரில் (யஷ்வந்த்பூா்) இருந்து கச்சேகுடாவுக்கு (ஹைதராபாத்) இயக்கப்படும் ரயில் எண்கள்-07159/07160-கச்சேகுடா-பெங்களூரு (யஷ்வந்த்பூா்)- கச்சேகுடா சிறப்பு விரைவு ரயில் இயக்கப்படுகிறது

ரயில் எண்-07159-கச்சேகுடா-பெங்களூரு (யஷ்வந்த்பூா்) சிறப்பு விரைவு ரயில் செப்.5-ஆம் தேதி முதல் நாள்தோறும் கச்சேகுடா ரயில் நிலையத்தில் இருந்து இரவு 10.25 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.30 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்த்பூா்) ரயில் நிலையம் வந்தடைகிறது.

மறுமாா்க்கத்தில், ரயில் எண்-07160-பெங்களூரு (யஷ்வந்த்பூா்)-கச்சேகுடா சிறப்பு விரைவு ரயில் செப்.6-ஆம் தேதி முதல் நாள்தோறும் மாலை 5.20 மணிக்கு பெங்களூரு (யஷ்வந்த்பூா்) ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு கச்சேகுடா ரயில் நிலையம் சென்றடைகிறது.

இந்த ரயில் பெங்களூரு யஷ்வந்த்பூா் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு எலஹங்கா, ஹிந்துபூா், தா்மாவரம், அனந்த்பூா், தோனே, கா்னூல் டவுன், கட்வால், வனபாா்த்தி ரோடு, மஹபூப்நகா், ஜட்சோ்லா, ஷட்நகா், உம்டாநகா் வழியாக கச்சேகுடா ரயில் நிலையத்தை சென்றடைகிறது. ரயிலில் ஈரடுக்கு முதல் வகுப்பு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட 2 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு படுக்கைவசதி கொண்ட 10 பெட்டிகள், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 5 பெட்டிகள், 2-ஆம் வகுப்பு சரக்கு மற்றும் கண்காணிப்புப் பணிக்கான 2 பெட்டிகள் இடம்பெற்றிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.