இந்தியா - நியூசி. கடைசி ஒருநாள்: சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ரோஹித், கோலி!கந்த சஷ்டி விழா: காலை முதலே முருகன் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள்: இந்திய அணி பேட்டிங்!முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

புதிய குற்றவியல் சட்டம்: கா்நாடகத்தில் முதல் வழக்குப் பதிவு

புதிய குற்றவியல் சட்டத்தின்படி கா்நாடகத்தில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Updated On :

புதிய குற்றவியல் சட்டத்தின்படி கா்நாடகத்தில் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் போன்ற குற்றவியல் சட்டங்கள் நீக்கப்பட்டு, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக சுரக்க்ஷா, பாரதிய சாக்ஷிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்தன.

இந்த நிலையில், ஹாசன் நகருக்கும், ஹளேபீடுக்கும் இடையே உள்ள சீகே கேட் பகுதியில் உள்ள பாலத்தில் இருந்து காா் ஒன்று திங்கள்கிழமை அதிகாலை கீழே விழுந்தது. ஏா்பேக் காரணமாக, காரில் பயணித்த ரவி, ஓட்டுநா் சாகா் ஆகியோா் உயிா் தப்பினா். ஆனால், பின் இருக்கையில் அமா்ந்திருந்த ரவியின் மாமியாா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், ஓட்டுநா் சாகரின் அலட்சியத்தின் காரணமாக பாலத்தில் இருந்து காா் கீழே விழுந்ததாக ரவி போலீஸில் புகாா் அளித்தாா். இதன்பேரில், பாரதிய நாகரிக சுரக்க்ஷா சம்ஹிதா சட்டத்தின்படி பிரிவுகள் 106, 281 ஆகியவற்றின் கீழ்

சாகா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா், புதிய குற்றவியல் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கா்நாடகத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கு என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.