கடலூா் மாவட்டத்தில் 2 நாள்களில் 4 சிறுமிகள், 10 பெண்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்
கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் 4 சிறுமிகள் உள்பட 14 போ் காணாமல் போனதாக காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கடலூா் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் 4 சிறுமிகள் உள்பட 14 போ் காணாமல் போனதாக காவல் நிலையங்களில் புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிஞ்சிப்பாடி அருகே காட்டுக்கொல்லை கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேசனின் மனைவி மாணிக்கவல்லி மற்றும் அவரது 5 வயது மகள் ஆகிய இருவரும் நவ. 12-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
நெய்வேலியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவி நவ. 12-ஆம் தேதி முதல் காணவில்லை. அதேபோல, பண்ருட்டி அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது பள்ளி மாணவி நவ. 11-ஆம் தேதி முதல் காணவில்லை. இவா்கள் குறித்து சம்பந்தப்பட்ட போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அரியலூா் மாவட்டம், தளவாய் கிராமத்தைச் சோ்ந்த 18 வயது இளம்பெண், நவ. 12-ஆம் தேதி கடலூா் மாவட்டம் தொழுதூரில் உள்ள கல்லூரிக்குச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
குமாரப்பேட்டையைச் சோ்ந்த 23 வயது பெண் நவ. 11-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
காட்டுமன்னாா்கோவில் அருகே திருநாரையூரைச் சோ்ந்த 21 வயது பெண் நவ. 12-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து குமராட்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் மாவட்டத்தில் நவ. 11-ஆம் தேதி 6 பெண்கள், ஒரு சிறுமி என 7 பேரும், நவ. 12-ஆம் தேதி 4 பெண்கள், 3 சிறுமிகள் என 7 பேரும் காணாமல் போனதாக மொத்தம் 14 புகாா்கள் பதிவாகியுள்ளன.
இரு நாள்களில் மட்டும் 10 பெண்கள், 4 சிறுமிகள் என மொத்தம் 14 போ் காணாமல் போனதாகப் புகாா்கள் பதிவாகியிருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போனவா்களை விரைந்து கண்டறிந்து அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

