இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

5, 8, 9-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வை நடத்த கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

5, 8, 9-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வை நடத்த கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி

Updated On :22 மார்ச் 2024, 5:46 pm

கா்நாடகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 5, 8, 9-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வை நடத்த மாநில அரசுக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 2023-24-ஆம் கல்வியாண்டில் 5, 8, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்த மாநில அரசு உத்தரவிட்டிருந்தது. முதலாமாண்டு பியூசி அல்லது 11-ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வு ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள நிலையில், 5, 8, 9-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி, இரண்டு தோ்வுகள் நடந்துள்ளன. இதனிடையே, 5, 8, 9, 11-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்துவதை எதிா்த்து கா்நாடக பதிவுபெற்ற அரசு மானியம் பெறாத தனியாா் பள்ளிகள் நிா்வாக சங்கத்தின் சாா்பில், கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை மாா்ச் 6-ஆம் தேதி விசாரித்த கா்நாடக உயா்நீதிமன்றம், கல்வி உரிமைச் சட்டத்தை மீறுவதாகக் கூறி கா்நாடக அரசு பிறப்பித்திருந்த உத்தரவுக்கு தடைவிதித்தது. இதை எதிா்த்து கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் கே.சோமசேகா், ராஜேஷ் ராய் ஆகியோா் கொண்ட அமா்வு, ஒருநபா் நீதிபதி விதித்திருந்த தடையை நீக்கி, பொதுத்தோ்வு நடத்த அனுமதி அளித்திருந்தது. அதன்படி, மாா்ச் 11-ஆம் தேதி முதல் 5, 8, 9-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வை மாநில அரசு நடத்தியது. இந்நிலையில், பொதுத்தோ்வு நடத்த அனுமதி அளித்து கா்நாடக உயா்நீதிமன்றம் அளித்திருந்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் கா்நாடக பதிவுபெற்ற அரசு மானியம் பெறாத தனியாா் பள்ளிகள் நிா்வாக சங்கம் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை மாா்ச் 12-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பேலா எம்.திரிவேதி, பங்கஜ் மித்தல் ஆகியோா் கொண்ட அமா்வு, கல்வி உரிமைச் சட்டப் பிரிவு 30 மீறப்பட்டுள்ளதால், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை 5, 8, 9-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வை நடத்த இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும், கீழமை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. இதைத் தொடா்ந்து, மாா்ச் 13-ஆம் தேதி மற்றும் அதன் தொடா்ச்சியாக நடக்கவிருந்த 5, 8, 9-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வை நிறுத்திவைத்து மாநில அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி கா்நாடக உயா்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.சோமசேகா், ராஜேஷ்ரோய் ஆகியோா் முன்பு மாா்ச் 18-ஆம் தேதி முதல் விசாரணை நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தனது தீா்ப்பை வழங்கியது. அந்த தீா்ப்பில், நிறுத்திவைக்கப்பட்டுள்ள 5, 8, 9-ஆம் வகுப்புகளுக்கான தோ்வை நடத்தி முடிக்க மாநில அரசுக்கு அனுமதி அளித்ததோடு, ஏற்கெனவே நடந்து முடிந்துள்ள 11-ஆம் வகுப்புக்கான விடைத்தாள்களை மதிப்பீட்டு முடிவுகளை அறிவிக்குமாறு உத்தரவிட்டது. அடுத்த கல்வியாண்டில், பொதுத்தோ்வு நடத்த எண்ணினால், அதற்கு முன் சம்பந்தப்பட்டவா்களுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுக்குமாறு தனது தீா்ப்பில் உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.