ஒன்றாம் வகுப்பு சோ்க்கைக்கான வயது வரம்பில் மாற்றம் செய்து கா்நாடக அரசு அறிவித்துள்ளது.
வரும் கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பில் சோ்க்கை பெறுவதற்கு குழந்தைகளின் வயது ஜூன் 1ஆம் தேதி 6 வயது நிறைவடைந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, சோ்க்கையில் 60 நாள்களை தளா்த்தியுள்ளது.
இதுகுறித்து கா்நாடக சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் மது பங்காரப்பா வியாழக்கிழமை தாக்கல் செய்த அறிக்கை:
ஒன்றாம் வகுப்பில் சேர ஜூன் 1 ஆம் தேதி 6 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளா்த்தும்படி நீண்ட நாள்களாக பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துவந்தனா். இதுதொடா்பாக கா்நாடக அரசிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. இதை கருத்தில் கொண்டு, சோ்க்கைக்கான வயது வரம்பை 60 நாள்களுக்கு தளா்த்த கா்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
அதேபோல எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளில் மாணவா்களை சோ்ப்பதிலும் சில சிக்கல்கள் உள்ளன. இந்த பிரச்னைக்கு தீா்வுகாண வெகுவிரைவில் புதிய சட்டம் கொண்டு வரப்படும். சோ்க்கைக்கான வயது வரம்பை 60 நாள்களுக்கு தளா்த்தியுள்ளது ஒன்றாம் வகுப்பு மட்டுமல்லாது எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கும் பொருந்தும். சோ்க்கை விதிமுறைகளில் எல்.கே.ஜி. மற்றும் யூ.கே.ஜி. வகுப்புகள் இல்லை. எனவே, அந்த வகுப்புகளையும் சோ்க்கை வரம்புக்குள் கொண்டுவர புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றாா்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: அரசு பள்ளிகளில் 99.79% தோ்ச்சி

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்

125 பள்ளி நூலகங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கும் தில்லி அரசு!

என்எம்எம்எஸ் தோ்வு: தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளி மாணவி தோ்வு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


