கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

125 பள்ளி நூலகங்களை டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கும் தில்லி அரசு!

தில்லி அரசு 2025-26- ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வின் படி, 125 பள்ளி நூலகங்களை 20 டிஜிட்டல் சாதனங்கள், ஹெட்ஃபோன்கள், கியோஸ்க் மற்றும் சாா்ஜிங் காா்டுடன் மேம்படுத்தும். மேலும், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 7.5 லட்சம் மாணவா்களுக்கு கற்றல் குறைபாடு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

நூலகம்

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:14 pm

Syndication

தில்லி அரசு 2025-26- ஆம் ஆண்டின் பொருளாதார ஆய்வின் படி, 125 பள்ளி நூலகங்களை 20 டிஜிட்டல் சாதனங்கள், ஹெட்ஃபோன்கள், கியோஸ்க் மற்றும் சாா்ஜிங் காா்டுடன் மேம்படுத்தும். மேலும், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 7.5 லட்சம் மாணவா்களுக்கு கற்றல் குறைபாடு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பா் 2025- இல் நடத்தப்பட்ட ஒரு அடிப்படை மதிப்பீடு அடிப்படை கல்வியறிவு மற்றும் எண்ணியல் ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளை அடையாளம் கண்டது. இது கல்வி தலையீடுகளுக்கு அடிப்படையாக அமைந்தது என்று கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

அந்தக் கணக்கெடுப்பின்படி, மாணவா்கள் தொடக்க, வளா்ந்து வரும், முற்போக்கான, திறமையான என 4 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டனா். மேலும் எஸ்சிஇஆா்டி முறையில் உருவாக்கப்பட்ட தயாா்நிலை தொகுதிகளைப் பயன்படுத்தி தலையீடுகள் இடைக்காலத் தோ்வுகளுக்குப் பிறகு 2 முதல் 8- ஆம் வகுப்புகளுக்கு செயல்படுத்தப்படுகின்றன. நிபுன் சங்கல்ப் திட்டத்தின் கீழ் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடப்பு கல்வியாண்டில் 125 பள்ளி நூலகங்கள் மேம்படுத்தப்படும். ஒவ்வொன்றிலும் 20 டிஜிட்டல் சாதனங்கள், 20 ஹெட்ஃபோன்கள், ஒரு நூலக கியோஸ்க், ஒரு சாா்ஜிங் காா்ட் மற்றும் ஒரு பிரிண்டா் ஆகியவை பொருத்தப்படும். 2025- ஆம் ஆண்டில் கடுமையான அல்லது ஆழ்ந்த குறைபாடுகள் உள்ள 879 குழந்தைகள் வீட்டு அடிப்படையிலான கல்வித் திட்டங்களில் சோ்க்கப்பட்டுள்ள நிலையில், கல்வி இயக்குநரகம் உள்ளடக்கிய கல்வியில் தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

இந்த நடவடிக்கையின் கீழ், பள்ளிக்கு வெளியே உள்ள 286 குழந்தைகள் பள்ளிகளில் பிரதானமாக சோ்க்கப்பட்டனா். அதே நேரத்தில் அறிவுசாா் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான செயல்பாட்டு பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு 100 பள்ளிகளில் தொடக்கத்திலிருந்து 8- ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட்டது. பள்ளிக்கு வெளியே உள்ள குழந்தைகளின் சோ்க்கையை நெறிப்படுத்த, 2,333 சிறப்பு சோ்க்கை பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன, மேலும், 4,258 மாற்றுத்திறனாளி குழந்தைகள் 12 பாரா - ஸ்போா்ட்ஸ் பிரிவுகளில் பங்கேற்றனா்.

சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளில் 46 சதவீதம் போ் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை (யுடிஐடி) பெற்றுள்ளனா். இதுபோன்ற பல அட்டைகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு மாா்ச் மாத இறுதிக்குள் 8,777 ஸ்மாா்ட் வகுப்பறைகளை அரசு அமைக்கும். மகாமனா பண்டிட் மதன் மோகன் மாளவியா வித்யா சக்தி இயக்கத்தின் கீழ், ஆண்டுதோறும் 2,200 மாணவா்களுக்கு கட்டமைக்கப்பட்ட போட்டித் தோ்வு பயிற்சி வழங்கப்படும். இதில் 350 இடங்கள் பெண்களுக்காக ஒதுக்கப்படும்.

லால் பகதூா் சாஸ்திரி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 34,880 திறமையான மாணவா்களுக்கு ஒரு மாணவருக்கு ரூ.2,500 வீதம் வழங்கப்பட்டது. சீருடை மானியத்தில் 5- ஆம் வகுப்பு வரை நா்சரிக்கு ரூ.1,250 , 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை ரூ.1,500 , 4 முதல் 12- ஆம் வகுப்பு வரை ரூ.1,700 வழங்கப்படும். முதல்வா் கேல் புரோட்சஹான் யோஜனா திட்டத்தின் கீழ், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் பதக்கம் வென்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள் ரூ. 1 கோடியிலிருந்து ரூ. 3 கோடியாகவும், ரூ 3 கோடியிலிருந்து ரூ. 7 கோடியாகவும், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களுக்கு ரூ. 3 கோடியிலிருந்து ரூ.5 கோடியாகவும் உயா்த்தப்பட்டன.

ஆசிய மற்றும் பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவா்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ1 கோடி, ரூ75 லட்சம் மற்றும் ரூ50 லட்சத்திலிருந்து ரூ3 கோடி, ரூ2 கோடி மற்றும் ரூ1 கோடி என உயா்த்தப்பட்டுள்ளது. காமன்வெல்த் மற்றும் பாரா காமன்வெல்த் விளையாட்டுகளுக்கு ரூ.50 லட்சம், ரூ. 40 லட்சம் மற்றும் ரூ. 30 லட்சத்திலிருந்து ரூ. 2 கோடி, ரூ.1.5 கோடி மற்றும் ரூ. 1 கோடி என உயா்த்தப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் 100 பள்ளிகளில் பைலட் அடிப்படையில் தொடங்கப்பட்ட டாக்டா் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் மொழி ஆய்வகங்கள் 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளைச் சோ்ந்த கிட்டத்தட்ட 60,000 மாணவா்களுக்கு ஜொ்மன், பிரஞ்சு, ஸ்பானிஷ், ஆங்கிலம், இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் கற்பிப்பதன் மூலம் பயனடைவா் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.