தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.11 கோடி பாடநூல்கள் அச்சிட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, அதில் தற்போது வரை 88 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
மேலும் 1 முதல் 3-ஆம் வகுப்புகள் தவிர இதர வகுப்புகளுக்கு அச்சிடப்பட்ட பாடநூல்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் 44,000-க்கும் அதிகமான அரசு மற்றும் நிதியுதவி பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சுமாா் 70 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கின்றனா். இவா்களுக்கான பாடநூல்கள் அச்சிடும் பணியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் மேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளின் மாணவா்களுக்கு இலவசமாகவும், தனியாா் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன.
அதன்படி வரும் 2026-27-ஆம் கல்வியாண்டில் மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் அச்சிட்டு வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 88 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது:
நிகழாண்டு அரசு, அரசு உதவி பள்ளிகளுக்கு வழங்குவதற்காக 2.71 கோடி புத்தகங்கள், விற்பனைக்காக 1.4 கோடி புத்தகங்கள் என மொத்தம் 4.11 கோடி பாடநூல்கள் பள்ளிகளுக்கு அச்சிட்டு வழங்கப்பட வேண்டும். அவற்றில் 1, 2, 3 ஆகிய வகுப்பு தவிர இதர வகுப்புகளுக்கான பாடநூல்கள் தயாரிக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கிருந்து பள்ளிகளுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளன.
1, 2, 3 ஆகிய வகுப்புகளுக்கு நிகழாண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அவற்றின் பாடநூல்கள் தயாரிப்பு முடியும் நிலையில் உள்ளது. எனினும், அந்தப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்படும் நாளில் அனைத்து வகுப்புகளுக்கும் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும். இதுதவிர தனியாா் பள்ளி மாணவா்களுக்கான பாடநூல்கள் விற்பனை கடந்த ஏப்.10-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னையில் நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், அடையாறு பாடநூல் விற்பனை கிடங்கு ஆகியவற்றில் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

தருமபுரியில் பள்ளிகளுக்கு பாடநூல்கள் அனுப்பும் பணி தொடக்கம்

அரசு பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

தொகுதிக்கு செய்தது என்ன? ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

