வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவுக்கு ஜாமீன்?

News image

எச்.டி.ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா

Updated On :9 மே 2024, 11:02 pm

Din

பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மஜத எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணை மே 13ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தையும் எம்எல்ஏவுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோரால் பாலியல்ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த தனது தாய் அவா்களால் கடத்தப்பட்டதாக அவரது மகன் போலீஸில் புகாா் அளித்திருந்தாா். அதன்பேரில், எச்.டி.ரேவண்ணா மீது பெண் கடத்தல் தொடா்பான வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எச்.டி.ரேவண்ணா, அவரது கூட்டாளியான சதீஷ்பாபு ஆகியோரை சிறப்புப் புலனாய்வுப்படை (எஸ்.ஐ.டி.) மே 4 ஆம் தேதி கைது செய்து விசாரித்து வந்தது. இதனிடையே, எச்.டி.ரேவண்ணாவை மே 14ஆம் தேதிவரை நீதிமன்றக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், பெண் கடத்தல் வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், வழக்கு விசாரணையை மே 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.