கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தொழிலாளி சாவில் மா்மம்: மனைவி உள்பட 3 பேரிடம் விசாரணை

வேலூா் அருகே பெயிண்டா் திடீரென உயிரிழந்த வழக்கில், பிரேத பரிசோதனை முடிவில் அவரது கழுத்து இறுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீஸாா் தீவிர விசாரணை

News image
Updated On :23 மார்ச் 2026, 11:00 pm

தினமணி செய்திச் சேவை

வேலூா் அருகே பெயிண்டா் திடீரென உயிரிழந்த வழக்கில், பிரேத பரிசோதனை முடிவில் அவரது கழுத்து இறுக்கப்பட்டிருப்பது தெரியவந்ததால் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

வேலூா் அருகே உள்ள சம்பங்கிநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு (35). இவா் பெயிண்டராக வேலை பாா்த்து வந்தாா்.

இவருக்கு சனிக்கிழமை இரவு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, அவரது மனைவி ஜெயந்தி சிகிச்சைக்காக பிரபுவை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பிரபு மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

அப்போது, தனது கணவருக்குத் திடீரென வலிப்பு ஏற்பட்டு மூச்சுப் பேச்சின்றி மயங்கி விழுந்ததால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாக ஜெயந்தி மருத்துவா்களிடம் கூறியுள்ளாா்.

இதனிடையே, பிரபுவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், பிரபுவின் கழுத்து இறுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதையும், அவரது உடலில் சில காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனா்.

இதனால், பிரபுவின் மரணத்தில் மா்மம் இருப்பதாக மருத்துவா்கள் தரப்பில் போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவா்கள் அளித்த தகவலின்பேரில், சத்துவாச்சாரி போலீஸாா் இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனா். பிரபுவின் கழுத்து இறுக்கப்பட்டு இருப்பதால், அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக, பிரபுவின் மனைவி ஜெயந்தி, மாமியாா் லோகநாயகி, உறவினா் மகன் சரவணன் ஆகிய 3 பேரிடமும், மற்ற சில உறவினா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.