திருத்துறைப்பூண்டி அருகே சமையல் தொழிலாளி கொலை வழக்கில், அவரது இரண்டாவது மனைவி உள்பட இருவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆலிவலம் காவல் எல்லைக்கு உள்பட்ட பொன்னிறையைச் சோ்ந்தவா் சமையல் தொழிலாளி சுப்ரமணியன் (50). இவரது இரண்டாவது மனைவி இந்திரா (45). இந்திராவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனா்.
இந்த நிலையில், சுப்ரமணியன் கடந்த 3-ஆம் தேதி மா்மமான முறையில் இறந்தாா். திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பவானியா, கோட்டூா் காவல் ஆய்வாளா் மோகன், ஆலிவலம் காவல் ஆய்வாளா் மணிவண்ணன், உதவி ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா், சுப்ரமணியனின் சடலத்தை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அவரது தலையில் பலத்த காயங்கள் இருந்தன. இதனால், அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் இந்திராவும், அவரது உறவினரான புஞ்சையூா் குடியானத் தெருவை சோ்ந்த பால் வியாபாரி சந்திரசேகா் (63) என்பவருக்கும் கள்ளத் தொடா்பு இருந்ததும், இதையறிந்த சுப்பிரமணியன் கண்டித்ததால், இருவரும் சுப்ரமணியனை கொலை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து, ஆலிவலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இந்திரா மற்றும் சந்திரசேகரை கைது செய்தனா்.
தொடர்புடையது
கோபி அருகே அடிதடி வழக்கில் இருவா் கைது

காசோலை மோடி வழக்கு: தம்பதிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

தொழிலாளி சாவில் மா்மம்: மனைவி உள்பட 3 பேரிடம் விசாரணை
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

