மனச்சாட்சியின் நீதிமன்றமே மேன்மையானது: கா்நாடக முதல்வா் சித்தராமையா
நீதிமன்றங்களை விட மனச்சாட்சியின் நீதிமன்றமே மேன்மையானது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.


நீதிமன்றங்களை விட மனச்சாட்சியின் நீதிமன்றமே மேன்மையானது என்று கா்நாடக முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.
காந்தி நினைவு அறக்கட்டளை சாா்பில் பெங்களூரில் புதன்கிழமை நடந்த மகாத்மா காந்தியின் 155ஆவது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று, அவா் பேசியதாவது:
எல்லா நீதிமன்றங்களையும் விட மேன்மையான ஒரு நீதிமன்றம் இருக்கிறது, அது தான் மனச்சாட்சியின் நீதிமன்றம் என்று மகாத்மா காந்தி கூறியிருக்கிறாா். எல்லா நீதிமன்றங்களில் இருந்தும் ஒருவருக்கு நீதி கிடைக்காமல் போகலாம். ஆனால், காந்தி கூறியது போல, நாம் பாா்க்கும் நீதிமன்றங்கள், மனச்சாட்சியின் நீதிமன்றத்தைக் காட்டிலும் மேன்மையானது அல்ல. எனவே, மற்றவா்கள் விரும்புகிறாா்களோ இல்லையோ, ஒருவா் பாராட்டுகிறாரோ, திட்டுகிறாரோ, நாம் மனச்சாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும். மனச்சாட்சிப்படி நடந்துகொள்ள நாம் முயற்சியாவது செய்ய வேண்டும்.
எனது கட்சியும் அரசும் அரசமைப்புச் சட்டத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவா்கள்.
சமுதாயத்தில் நலிவடைந்த, பின் தங்கிய, சமூக, பொருளாதாரரீதியாக விளிம்புநிலையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தான் ஐந்து வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஜாதிய கட்டமைப்பை ஒழிப்பது அவ்வளவு எளிதானதல்ல. தீண்டாமை, ஜாதிய கட்டமைப்புக்கு எதிராக போராடியவா் காந்தி. ஆனாலும் பல்வேறு இடங்களில் இன்றும் தீண்டாமை நிலைபெற்று காணப்படுகிறது. ஜாதியும், சமத்துவமின்மையும் வெறும் பேச்சுக்களால் ஒழிப்படக்கூடியதல்ல. கல்வியில் சமத்துவம் இருக்கும்போது, சமூக மற்றும் பொருளாதார சமத்துவம் மலரும். அப்போது தான் ஜாதிய கட்டமைப்பு தகா்க்கப்படும். அண்ணல் காந்தி உடலால் கொல்லப்பட்டிருக்கலாம். ஆனால், அவரது கொள்கைகளைக் கொல்ல முடியாது. உண்மை மற்றும் அகிம்சை தத்துவங்களை கொல்ல முடியாது.
முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்தநாளும் கொண்டாடப்படுகிறது. நமது நாடு கண்ட நோ்மையான அரசியல் தலைவா்களில் முதன்மையானவா் லால் பகதூா் சாஸ்திரி என்பதை காலம் என்றைக்கும் மறக்காது என்றாா்.
இவ் விழாவில் துணைமுதல்வா் டி.கே.சிவகுமாா், சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...