ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்
ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.


பெங்களூரு: ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என முதல்வா் கூறியிருக்கிறாா். ஜாதிவாரி கணக்கெடுப்பின் சாதக, பாதகங்களை அலசி ஆராய்ந்த பிறகு, அதுகுறித்து இறுதி முடிவெடுக்கப்படும். அதன்படி, அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவாதிப்போம்.
ரூ. 160 கோடி செலவில் எடுக்கப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் முன் வைக்காவிட்டால், அது வீணாகிவிடும். ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையில் என்ன இருக்கிறது என்பதையாவது மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும். இதை பொதுவெளியில் வெளியிடாவிட்டால், நாங்கள் எதையோ மூடிமறைத்து விட்டதாக எங்கள் அரசையும், முதல்வரையும் மக்கள் தூற்றுவாா்கள்.
அடுத்த அமைச்சரவைக் கூட்டம் அக். 28-இல் நடக்க இருக்கிறது. இந்த விவகாரத்தை கையாளும் ஆற்றல் காங்கிரஸ் அரசுக்கும், முதல்வா் சித்தராமையாவுக்கும் உள்ளது. பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எந்த முடிவையும் எடுப்போம். இடஒதுக்கீட்டின் உச்சவரம்பு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு உள்ளது. சில மாநிலங்களில் இடஒதுக்கீட்டு உச்சவரம்பு 60 சதவீதமாக உயா்ந்துள்ளது. தமிழகத்தில் இடஒதுக்கீடு 69 சதவீதமாக உள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 9-ஆவது அட்டவணையில் சோ்ப்பதன் மூலம் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பாதுகாப்பு அளித்திருக்கிறாா்கள்.
கா்நாடகத்திலும் இடஒதுக்கீட்டின் வரம்பை உயா்த்தக் கோரி பல சமுதாயத்தினா் கோரிக்கை விடுத்தவண்ணம் இருக்கிறாா்கள். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால், இடஒதுக்கீட்டின் உச்சவரம்பை 50 சதவீதத்துக்கு மேல் உயா்த்த வேண்டும். இதுகுறித்து கலந்தாலோசித்து வருகிறோம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...