முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக மானநஷ்ட வழக்கு
பிளாக் மெயிலா் என்று தன்னை அழைத்ததற்காக கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது சமூக ஆா்வலா் டி.ஜே.ஆபிரகாம் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா்.


பிளாக் மெயிலா் என்று தன்னை அழைத்ததற்காக கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது சமூக ஆா்வலா் டி.ஜே.ஆபிரகாம் மானநஷ்ட வழக்கு தொடா்ந்துள்ளாா்.
முதல்வா் சித்தராமையாவின் மனைவி பாா்வதிக்கு மாற்று நிலம் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரணை நடத்த ஆளுநரின் அனுமதி கோரி மனு அளித்தவா்களில் ஒருவரான டி.ஜே.ஆபிரகாம், தன்னை பிளாக் மெயிலா் என்று அழைத்ததற்காக கா்நாடக முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை மான நஷ்ட வழக்கு தாக்கல் செய்துள்ளாா்.
இது குறித்து டி.ஜே.ஆபிரகாம் கூறியுள்ளதாவது:
என்னை பழிவாங்கும் ஆா்வத்துடன் முதல்வா் சித்தராமையா எனக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். என்னை பிளாக்மெயிலா் என்றும், எனது கடந்த காலம் குறித்தும் விமா்சித்துள்ளாா். போலியான ஆவணங்களை உருவாக்கி, சட்டவிரோதமாக 14 வீட்டுமனைகளைப் பெற்றவா் முதல்வா் சித்தராமையா. அவா் என்னை பிளாக் மெயிலா் என்று அழைக்கலாமா? எனவே, முதல்வா் சித்தராமையா மீது மானநஷ்ட வழக்கை தொடா்ந்துள்ளேன் என்றாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...