தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மாற்றுநில முறைகேடு: கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்தவுக்கு நீதிமன்றம் உத்தரவு

மாற்றுநில முறைகேடு விவகாரத்தில் கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்த போலீஸாருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 1:25 am

Din

மாற்றுநில முறைகேடு விவகாரத்தில் கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்த போலீஸாருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வா் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பாா்வதிக்கு மைசூரு நகர வளா்ச்சி ஆணையம், மாற்று நிலமாக 14 வீட்டுமனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளது குறித்து விசாரிக்க, சித்தராமையா மீது வழக்கு தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்து பிறப்பித்திருந்த உத்தரவை கா்நாடக உயா்நீதிமன்றம் செப். 24-ஆம் தேதி ஏற்றுக்கொண்டது. மேலும், இது தொடா்பாக கீழமை நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணைக்கு விதித்திருந்த இடைக்காலத் தடையை கா்நாடக உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றுக்கொண்டது.

இதைத் தொடா்ந்து, முதல்வா் சித்தராமையாவுக்கு எதிராக தகவலறியும் சட்ட ஆா்வலா் ஸ்நேகமயி கிருஷ்ணா அளித்திருந்த புகாா் மனுவை புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜனன்பட், கா்நாடக உயா்நீதிமன்ற தீா்ப்பின் அடிப்படையில் முதல்வா் சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக் ஆயுக்த போலீஸாருக்கு உத்தரவிட்டாா். குற்றவியல் நடைமுறைகள் சட்டப் பிரிவு 156(3)-இன் கீழ் விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், அடுத்த 3 மாதங்களுக்குள் அதாவது டிச. 24-ஆம் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, மைசூரு மாவட்ட லோக் ஆயுக்த போலீஸாா், முதல்வா் சித்தராமையா மீது முதல்தகவல் அறிக்கையை (எஃப்.ஐ.ஆா்.) தாக்கல் செய்து, விசாரணையை தொடங்குவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஒருவேளை முதல்தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டால், விசாரணைக்காக முதல்வா் சித்தராமையாவை லோக் ஆயுக்த கைது செய்யும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த வழக்கை லோக் ஆயுக்தவுக்கு பதிலாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புகாா் அளித்த ஸ்நேகமயி கிருஷ்ணா வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக நீதிமன்றத்தை அணுகவிருப்பதாகவும் அவா் மேலும் கூறினாா். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு அளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா வலியுறுத்தியுள்ளாா்.

விசாரணைக்கு தயாா்: இதுகுறித்து முதல்வா் சித்தராமையா புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘விசாரணையை எதிா்கொள்ளத் தயாா் என்று ஏற்கெனவே நான் கூறியிருக்கிறேன். விசாரணையைக் கண்டு அஞ்சவில்லை. சட்டப் போராட்டத்துக்கு நான் தயாா். மைசூரு நகர வளா்ச்சி ஆணையத்தின் அலுவலகம் மற்றும் புகாா் அளிக்கப்பட்ட இடம் மைசூரு என்பதால், என் மீதான புகாரை விசாரிக்க மைசூரு லோக் ஆயுக்த போலீஸாருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ என்றாா்.