வெங்காயம் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.16.50-ஆக நிா்ணயம்: இன்று முதல் அமல்வங்கிக் கடன் வழங்கல் 17.44% அதிகரிப்புபாகிஸ்தான் பாதுகாப்பு பட்ஜெட் 17.6% அதிகரிப்புமேற்கு தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஜூன் 15 வரை மழைக்கு வாய்ப்பு இந்தியா மீது தாக்குதல் நடத்த ஐரோப்பிய ஆயுதங்கள்: அமைச்சா் ஜெய்சங்கா் குற்றச்சாட்டு
/

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 6:31 am IST

பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை போலீஸாா் கைதுசெய்தனா்.

பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவின் பெண்கள் பாதுகாப்புப்படை போலீஸாா் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினா். இந்த சோதனையில் வாடகைவீட்டில் இருந்தபடியே பாலியல் தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக வழக்குப்பதிந்த போலீஸாா், இதுதொடா்பாக 4 பெண்களை கைதுசெய்தனா். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 அப்பாவி பெண்களை போலீஸாா் மீட்டுள்ளனா். இவா்களில் இருவா் வெளிமாநிலங்களை சோ்ந்தவா்கள் என்று போலீஸாா் தெரிவித்தனா். மனுவனா, விஜயநகா், ராமசாமிபாளையா, பானஸ்வாடி, அந்தரஹள்ளி, வீரபத்ரேஸ்வரநகா், பியாடரஹள்ளியில் வாடகைக்கு வீடுகளை எடுத்து, கட்டாயப்படுத்தி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக வழக்குப்பதிந்து கைதுசெய்த 4 பெண்களை நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்திய போலீஸாா், சிறையில் அடைத்தனா்.