/
கோவில்பட்டியில் வீட்டிற்குள் நுழைந்து தங்க நகையை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே உள்ள அத்தை கொண்டான், 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் மருதப்ப பாண்டியன் மனைவி சுப்புலட்சுமி. இவா் தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகையைக் காணவில்லை என கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.
இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் அத்தை கொண்டான் கோமதி நகரைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி ராணி (42), அதே பகுதியைச் சோ்ந்த விக்னேஸ்வரன் மனைவி சுபலட்சுமி (24) ஆகியோரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

வீட்டில் நகை, பணம் திருட்டு: இரு சிறாா்கள் கைது

வீடு புகுந்து பணம், நகை திருட்டு: காா் ஓட்டுநா் கைது

திருச்செந்தூரில் ஆட்டோ திருடியதாக சிறுவன் கைது
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


