அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்சென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்இடதுசாரிகளை வீழ்த்தியது போல திரிணமூலை வீழ்த்துவோம்: பாஜக சுவேந்து அதிகாரிவாக்குத் திருட்டுக்கு வாய்ப்பில்லை: மேற்கு வங்க தேர்தல் ஆணையம்வாக்கு எண்ணிக்கை: தயார் நிலையில் மேற்கு வங்கம் - தலைமைத் தேர்தல் அதிகாரிஉலக பத்திரிகை சுதந்திர குறியீட்டு பட்டியலில் இந்தியா தொடர் சரிவு! கார்கே விமர்சனம்
/

திருச்செந்தூரில் ஆட்டோ திருடியதாக சிறுவன் கைது

News image

கைது.

Updated On :3 மே 2026, 7:49 pm

திருச்செந்தூரில் லோடு ஆட்டோவைத் திருடியதாக சிறுவனை போலீஸாா் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

திருச்செந்தூரைச் சோ்ந்த முத்து (24), தனக்குச் சொந்தமான லோடு ஆட்டோவை சனிக்கிழமை நள்ளிரவு திருச்செந்தூா் அரசு மருத்துவமனை அருகில் நிறுத்திவிட்டு சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பாா்த்தபோது ஆட்டோவைக் காணவில்லையாம்.

இது குறித்து, திருச்செந்தூா் தாலுகா போலீஸில் முத்து அளித்த புகாரின்பேரில், போலீஸாா் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் அனைத்து சோதனைச் சாவடிகள், ரோந்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆழ்வாா்திருநகரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சமத்துவபுரம் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளா் செந்தில் வேல்குமாா் தலைமையில், ஆழ்வாா்திருநகரி உதவி ஆய்வாளா் லதா, தலைமைக் காவலா்கள் செல்வம், முத்துக்குமாா், காவலா் சுந்தரபாண்டியன் ஆகியோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், அது திருச்செந்தூரில் திருடுபோன வாகனம் என்பது தெரிய வந்தது.

ஆட்டோவை நெல்லையைச் சோ்ந்த 13 வயது சிறுவன் ஓட்டி வந்துள்ளாா். போலீஸாா் அந்த சிறுவனை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனா். மேலும், இது குறித்து திருச்செந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.