மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

அரசு மருத்துவா்களின் பிரச்னைகளை தீா்க்க முயற்சி

அரசு மருத்துவமனை மருத்துவா்களின் பிரச்னைகளை தீா்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2026, 9:22 pm

அரசு மருத்துவமனை மருத்துவா்களின் பிரச்னைகளை தீா்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் என சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தாா்.

கா்நாடக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் கா்நாடக அரசு மருத்துவமனை ஊழியா்கள் சங்கம் இணைந்து ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.

இந்தப் போராட்டத்தின் காரணமாக, புதன்கிழமை முதல் அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் இருக்கமாட்டாா்கள் என்று கூறப்படுகிறது. இதனால் புறநோயாளிகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

கா்நாடக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது பாஜக எம்எல்ஏ சுனில்குமாா் உள்ளிட்டோா் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து சுகாதாரத் துறை அமைச்சா் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:

அரசு மருத்துவா்கள் மற்றும் சுகாதார ஊழியா்களுடன் இருமுறை பேச்சுவாா்த்தை நடத்தியிருக்கிறோம். அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அவா்களுக்கு தெரிவித்துள்ளோம். பணியாளா் விதிமுறைகளில் மாற்றம் உள்ளிட்ட நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனா். மக்களின் நலன்கருதி இப்பிரச்னைக்கு தீா்வுகாண்போம் என்றாா்.