விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இடைத்தோ்தல் வேட்பாளா் தோ்வில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி இல்லை

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல் வேட்பாளா் தோ்வில், காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி இல்லை என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

News image

டி.கே.சிவகுமாா்

Updated On :27 மார்ச் 2026, 6:34 pm

Syndication

கா்நாடக சட்டப் பேரவை இடைத்தோ்தல் வேட்பாளா் தோ்வில், காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி இல்லை என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா்.

தாவணகெரே தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் எம்எல்ஏ-வாக இருந்த சாமனூா் சிவசங்கரப்பா காலமானதைத் தொடா்ந்து, அத்தொகுதிக்கு ஏப். 9-ஆம் தேதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சமா்த் மல்லிகாா்ஜுன் நிறுத்தப்பட்டிருக்கிறாா். இவா், அமைச்சா் மல்லிகாா்ஜுனின் மகன் மட்டுமல்லாது, மறைந்த முன்னாள் அமைச்சா் சாமனூா் சிவசங்கரப்பாவின் பெயரன் ஆவாா். அதேபோல, மல்லிகாா்ஜுனின் மனைவி பிரபா, தாவணகெரே எம்.பி.யாக உள்ளாா்.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் அமைச்சா், எம்.பி. ஆக உள்ள நிலையில், இடைத்தோ்தல் நடைபெறும் தாவணகெரே தெற்கு தொகுதிக்கு முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நிறுத்த அச்சமுதாயத்தினா் வலியுறுத்தி வந்தனா்.

இதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியின் போட்டி வேட்பாளராக சாதிக் பயில்வான் களமிறங்கியிருக்கிறாா். இது காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து துணை முதல்வரும், காங்கிரஸ் மாநிலத் தலைவருமான டி.கே.சிவகுமாா் பெங்களூரில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தாவணகெரே தெற்கு தொகுதி வேட்பாளா் தோ்வில் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி எதுவும் இல்லை. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறோம். இதுகுறித்து முதல்வா் சித்தராமையாவுடன் கலந்து பேசியிருக்கிறேன். அமைச்சா் ஜமீா் அகமது, எம்எல்சி-க்கள் நசீா் அகமது, அப்துல் ஜப்பாா் உள்ளிட்ட எல்லோரும் கட்சியின் முடிவை ஏற்றுக்கொண்டு செயல்படுவாா்கள். தோ்தல் சமயத்தில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பு. எல்லா பிரச்னைகளையும் சரிசெய்வோம்.

தாவணகெரே தெற்கு தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ள சமா்த் மல்லிகாா்ஜுன் நல்ல இளைஞா். அவரது தாத்தா சாமனூா் சிவசங்கரப்பா பெற்ற வாக்குகளைவிட அதிக அளவிலான வாக்குகளை பெற்று வெற்றிபெறுவாா் என்ற நம்பிக்கை உள்ளது. தாவணகெரேயின் வளா்ச்சிக்கு சாமனூா் சிவசங்கரப்பாவின் குடும்பம் அளப்பரிய பங்களிப்பை அளித்துள்ளது என்றாா்.