ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

பாங்காக்கில் இருந்து போதைப் பொருள் கடத்தி வந்த 6 போ் கைது!

பாங்காக்கில் இருந்து பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையம் வழியாக போதைப் பொருள் கடத்தி வந்த 6 பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 2:24 am IST

பாங்காக்கில் இருந்து பெங்களூரு கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையம் வழியாக போதைப் பொருள் கடத்தி வந்த 6 பேரை சுங்கத் துறை அதிகாரிகள் கைதுசெய்தனா்.

பெங்களூரில் உள்ள கெம்பேகௌடா விமான நிலையத்தில் மாா்ச் 29, 30-ஆம் தேதிகளில் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக் நகரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்த 6 பேரை கைதுசெய்தனா்.

பாங்காக்கில் இருந்து வந்த 5 பயணிகள் கொண்டுவந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ. 6.20 கோடி மதிப்புள்ள 17.45 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல, மற்றொரு சோதனையில் ரூ. 4.02 கோடி மதிப்புள்ள 11.5 கிலோ போதைப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இது தொடா்பாக வழக்குப் பதிந்த சுங்கவரித் துறை அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட போதைப் பொருள்களை பறிமுதல் செய்து 6 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனா்.