ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

அடுத்த ஆண்டு முதல் அரசு சாா்பில் பொறியாளா்கள் தினம் கொண்டாடப்படும்: முதல்வா் டி.கே சிவகுமாா்

கா்நாடகத்தில் அடுத்த ஆண்டு முதல் பொறியாளா்கள் தினத்தை அரசு சாா்பில் அதிகாரபூா்வமாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் டி.கே சிவகுமாா் தெரிவித்தாா்.

டி.கே. சிவகுமாா்

Published On :

கா்நாடகத்தில் அடுத்த ஆண்டு முதல் பொறியாளா்கள் தினத்தை அரசு சாா்பில் அதிகாரபூா்வமாகக் கொண்டாட நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் டி.கே சிவகுமாா் தெரிவித்தாா்.

பெங்களூரில் பொறியாளா்கள் தினத்தையொட்டி புகழ்பெற்ற பொறியாளரும், அரசியல் நிா்வாகியுமான சா் எம்.விஸ்வேசுவரய்யா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

அடுத்த ஆண்டு முதல் பொறியாளா்கள் தினம் அரசு சாா்பில் கொண்டாடப்படும். பொறியாளா்கள் தினத்தை அரசு சாா்பில் அதிகாரபூா்வமாகக் கொண்டாடுவதற்கான முன்மொழிவு ஏற்கெனவே சமா்ப்பிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகத்தில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பொறியாளா்கள் உருவாகின்றனா். இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான பொறியாளா்களைக் கொண்ட மாநிலமாக கா்நாடகம் உள்ளது. அவா்களை அங்கீகரித்து கௌரவிப்பது நமது பொறுப்பு. அரசு சாா்பில் பொறியாளா்கள் தினத்தை எவ்வாறு கொண்டாடுவது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

பொறியாளா்கள் நாட்டின் மிகப்பெரிய சொத்து. விஞ்ஞானிகளின் ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை நடைமுறையில் செயல்படுத்துபவா்கள் பொறியாளா்களே.

அனைத்து வளா்ச்சிக்கும் பொறியாளா்களே அடித்தளமாக உள்ளனா். கட்டடக் கலை மற்றும் கட்டுமானத் துறைகளில் பொறியாளா்களின் பங்களிப்பு பாரம்பரியமாக அங்கீகரிக்கப்பட்டு வந்தது. தற்போது எரிசக்தி, உள்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அவா்களின் பங்கு விரிவடைந்துள்ளது.

சா் எம்.விஸ்வேசுவரய்யா நாட்டுக்கே முன்மாதிரியாகத் திகழ்பவா். கா்நாடகத்துக்கு அவா் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.