நிரப்பப்படாத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்
சிதம்பரம், டிச. 21: நடப்பு கல்வி ஆண்டில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் அரசுப் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில்


சிதம்பரம், டிச. 21: நடப்பு கல்வி ஆண்டில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால் அரசுப் பள்ளி மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், சிறப்பு ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் காலி இடங்களுக்கு ஏற்ப ஜனவரி முதல் தேதி நிலவரப்படி தகுதியுடைய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.
பின்பு ஜூன், ஜூலை மாதங்களில் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் நடத்தப்பட்டு பதவி உயர்வுக்கான ஆணை வழங்கப்படும். இதனால் கடந்த ஆண்டு மாணவ, மாணவிகள் எவ்வித சிரமமும் இன்றி கல்வி கற்று வந்தனர்.
நடப்பு 2010-12-ம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு செய்யப்பட்டோர் பட்டியல் ஜூன் மாதம் வெளியிடப்பட்டுள்ள பதவி உயர்வு கவுன்சிலிங் காலதாமதமாக கடந்த நவம்பர் 18-ம் தேதி நடத்தப்பட்டது.
இதில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு ஆணை பெற்ற 1200 ஆசிரியர்களில் பெரும்பாலானோர் பதவி உயர்வில் செல்ல மறுத்துவிட்டனர்.
இதனால் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான பணியிடங்களில் அனைத்து பாடங்களிலும் கணிசமான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
அரசுப் பள்ளிகளிலும் பயிலும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு பணியேற்க மறுத்த பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலில் அடுத்த நிலையில் உள்ளவர்களை உடனடியாக நியமனம் செய்ய தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...