என்எல்சி நிறுவனத்துக்கு இந்திய பொறியாளர் கழக விருதுஎன்எல்சி நிறுவ

நெய்வேலி ஜன. 8: தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக என்எல்சி நிறுவனத்துக்கு விருது வழங்கி கெüரவித்துள்ளதுகொல்கத்தாவில் செயல்படும் நாட்டின் சிறந்த பொறியியல் அமைப்பான இந்தியப் பொறியாளர் கழகம்
Updated on
1 min read

நெய்வேலி ஜன. 8: தொழில் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதற்காக என்எல்சி நிறுவனத்துக்கு விருது வழங்கி கெüரவித்துள்ளதுகொல்கத்தாவில் செயல்படும் நாட்டின் சிறந்த பொறியியல் அமைப்பான இந்தியப் பொறியாளர் கழகம்.

 நாட்டில் ஏராளமான பொறியியல் வல்லுநர்களை உருவாக்கி, 1920-ம் ஆண்டு முதல் செயல்படும் இந்தியப் பொறியாளர் கழகம் ஒவ்வொரு ஆண்டும் தொழில் துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை தேர்ந்தெடுத்து விருது வழங்கி கெüரவித்து வருகிறது.

 அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சுரங்கம்,  மின்னுற்பத்தித் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருவதுடன், பொறியியல் துறையின் நவீன முன்னேற்றங்களை தங்களது தொழிற்கூடங்களில் அமல்படுத்தி, உற்பத்தித் திறனை அதிகரித்து வருவதால் 2010-ம் ஆண்டுக்கான விருதுக்கு என்எல்சி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.

 கடுமையான போட்டிகளுக்கு இடையே இந்தியப் பொறியாளர் கழகத்தின் நடுவர்கள் குழுவினர் நெய்வேலி வருகை தந்து, ஆய்வு மேற்கொண்டு பின்னர் விருதுக்கு என்எல்சியை தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்திய பொறியாளர் கழகத்தின் 91-ம் ஆண்டு பேரவை மற்றும் 25-வது இந்தியப் பொறியியல் மாநாடு அண்மையில் கொச்சியில் நடைபெற்றது.

 இந்த மாநாட்டில், இந்தியப் பொறியாளர் கழகத்தின் தேசியத் தலைவர் ஜி.பிரபாகர், சிறப்புமிக்க விருதை வழங்க என்எல்சி திட்டம் மற்றும் செயலாக்கத்துறை இயக்குநர் ஆர்.கந்தசாமி பெற்றுகொண்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com