சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திண்டிவனம், ஜன. 8: திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மன்னார்சாமி கோயில் பகுதியில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனர். நகர எல்லையில் உள்
Updated on
1 min read

திண்டிவனம், ஜன. 8: திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மன்னார்சாமி கோயில் பகுதியில் அப்பகுதி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தரக்கோரி சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

நகர எல்லையில் உள்ள அப்பாசாமி நகர், கோபாலபுரம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 100-க்கும் மேற்ப்பட்டோர் தங்கள் பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து பல மாதங்களாகியும், இது குறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த பிரம்மதேசம் போலீஸôர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் பொதுமக்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடாச்சலம், திண்டிவனம் மண்டல துணை வட்டாச்சியர் பூபதி உள்ளிட்ட அதிகாரிகள் மீண்டும் பேச்சு வார்தை நடத்தினர். அதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலில் பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் பதற்றம் நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com