கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மொபெட்டில் சென்றவர் பஸ் மோதி சாவு

கள்ளக்குறிச்சி, ஜன. 8:  விருகாவூர் அருகே தந்தையின் கல்லறைக்கு சென்று தூய்மை செய்து விட்டு மொபெட்டில் வீட்டுக்கு சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில் சனிக்கிழமை அதே இடத்தில் ராஜதுரை (36) இறந்தார

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:50 am

தினமணி

கள்ளக்குறிச்சி, ஜன. 8:  விருகாவூர் அருகே தந்தையின் கல்லறைக்கு சென்று தூய்மை செய்து விட்டு மொபெட்டில் வீட்டுக்கு சென்ற போது எதிரே வந்த தனியார் பஸ் மோதியதில் சனிக்கிழமை அதே இடத்தில் ராஜதுரை (36) இறந்தார்.

கள்ளக்குறிச்சியை அடுத்த விருகாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணுவின் மகன் ராஜதுரை. இவர் லாரியில் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

தந்தையின் கல்லறைக்கு சென்று தூய்மைப்படுத்தி விட்டு மொபெட்டில் ராஜதுரை வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சியில் இருந்து அடரி வழியாக விருத்தாசலம் சென்ற தனியார் பஸ் மோதியதில் அதே இடத்தில் ராஜதுரை இறந்தார்.

இது குறித்து வரஞ்சரம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து தனியார் பஸ் ஓட்டுனர் விருகாவூரைச் சேர்ந்த முத்துசாமியின் மகன் நடராஜனை (46) கைது செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.