விழுப்புரம், ஜூன் 23: விக்கிரவாண்டி ஒன்றியம், வி.சாத்தனூர் ஆதிதிராவிட மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் (படம்) நடைபெற்றது.
கடந்த 14 ஆண்டுகளாக குடிநீர் வசதி கேட்டு பல போராட்டங்கள் நடத்தியும் செய்யாததாலும், ஊராட்சிமன்றத் தலைவரின் சூழ்ச்சியாலும் இந்த நிலை நீடிப்பதை கண்டித்து விக்கிரவாண்டி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலர் எஸ். அய்யனார் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் வி. அர்ச்சுனன், மாவட்ட துணைச் செயலர் ஏ. இன்பஒளி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சுப்பராயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கட்சி நிர்வாகிகள் கே. மகேஸ்வரன், முத்துவேல், வி. தந்திரியான் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினர், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

ராமா் கோயில் நிதி முறைகேடு: அறக்கட்டளை நிா்வாகிகள் அயோத்தியைவிட்டு வெளியேற எஸ்ஐடி தடை

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 22) கடக ராசியா? செலவு யாருக்கு?

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 22 2026) 12 ராசிகளுக்கும்! ரிஷப ராசிக்கு எப்படி?
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP



