பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

நடைப்பயிற்சி பாதையில் விழுந்த மரம் அகற்றப்படுமா?

கடலூர், அக். 8: கடலூரில் நூற்றுக்கணக்கான மக்கள் நடைப்பயிற்சி செய்யும் பாதையில் விழுந்த வேப்ப மரம் 15 நாள்களுக்கு மேலாக, அகற்றப்படாமல் உள்ளது.  கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில், விளையாட்டு மைதானத்தை

Updated On :20 செப்டம்பர் 2012, 5:19 am IST

கடலூர், அக். 8: கடலூரில் நூற்றுக்கணக்கான மக்கள் நடைப்பயிற்சி செய்யும் பாதையில் விழுந்த வேப்ப மரம் 15 நாள்களுக்கு மேலாக, அகற்றப்படாமல் உள்ளது.

 கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில், விளையாட்டு மைதானத்தைச் சுற்றி, நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்கு வசதியாக, ரூ. 10 லட்சத்துக்கு மேல் செலவிட்டு, நடைபாதை உருவாக்கப்பட்டு உள்ளது.

 பாதுகாப்பான இடம் என்பதால், இதில் காலை மாலை வேளைகளில், முதியோர் முதல் சிறுவர் வரை, நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சிக்காக வருகிறார்கள். அவர்களுக்கு நடைப்பயிற்சியாளர் சங்கத்தினர் உடல் ஆரோக்கியத்துக்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்கள்.

 கடலூரில் கடந்த ஒரு மாதமாக விட்டுவிட்டு பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் 15 தினங்களுக்கு முன் இப்பாதையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றுவதற்கு, யாரும் முன்வரவில்லை. இதனால் நடைப்பயிற்சி செய்வோர், குறிப்பாக, முதியோர் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதாக புகார் தெரிவிக்கிறார்கள்.

 அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில், விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பராமரிப்புப் பணிகளை நகராட்சி மேற்கொள்கிறது. விழுந்துக் கிடக்கும் மரத்தை அப்புறப்படுத்த, நகராட்சிக்குக் கடிதம் கொடுத்து ஒரு வாரம் ஆகிவிட்டதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் தெரிவித்தார்.

 உள்ளாட்சித் தேர்தல் பணியில் மூழ்கி இருக்கும் கடலூர் நகராட்சி, இப்பணியை விரைவில் மேற்கொள்ளுமா?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.