சிதம்பரம், ஜன. 31: தருமபுரி அருகே கார் விபத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி மண்ரோடு பா.சந்திரன் ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.
இதையடுத்து அவரது உடல் சிதம்பரத்துக்கு திங்கள்கிழமை கொண்டு வரப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டதால் சிதம்பரம் நகரின் கிழக்கு பகுதி மற்றும் அண்ணாமலைநகர் பகுதியில் திங்கள்கிழமை கடைகள் அடைக்கப்பட்டன.
4 பஸ்கள், டெம்போ டிராவலர் வேன், கார் ஆகியவற்றின் மீது கல்வீச்சு தாக்குதலில் கண்ணாடிகள் உடைபட்டன.
சிதம்பரம் அண்ணாமலை நகர் மண்ரோட்டைச் சேர்ந்த பா.சந்திரன் (33). கடலூர் தெற்கு மாவட்ட வன்னியர் சங்க செயலராக உள்ளார். இவர் மீது கடலூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையத்திலும், திருப்பூர் மங்கலம் காவல் நிலையத்திலும் கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள், வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட 14 வழக்குகள் உள்ளன.
இவையல்லாமல் கட்டப்பஞ்சாயத்து மற்றும் கூலிக்காக கொலை செய்யும் செயலில் ஈடுபட்டு வந்ததால் கடந்த 14.3.2007-ம் ஆண்டு முதல் தலைமறைவான சந்திரனை போலீஸôர் தேடி வந்தனர்.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள தீர்த்தமலையில் இருக்கும் தனது நண்பரை சந்திக்க ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுள்ளார். அப்போது தீர்த்தமலை அருகே கார் சாலையோர புளிய மரத்தில் மோதி சந்திரன் இறந்தார்.
முன்னதாக அவரது உடலுக்கு வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு, அரசியல் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் தேவதாஸ் படையாண்டவர் உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். சந்திரன் மறைவை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டதால் அண்ணாமலை நகர், சிதம்பரம் பஸ்நிலையம், வேணுகோபால்பிள்ளை தெரு, எஸ்.பி.கோயில் தெரு, கீழவீதி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன.
அம்மாப்பேட்டை அருகே 3 பஸ்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்த டெம்போ டிராவலர் வேன், சிதம்பரம் நகரில் ஒரு பஸ் மற்றும் கார் மீது கல்வீசி கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
சிதம்பரம் டி.எஸ்.பி. ஆர்.மோகன் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள், 25 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் - நேரலை!

அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!

பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை: மு.க. ஸ்டாலின் வருத்தம்!

ராஜஸ்தான் ராயல்ஸால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும்: விக்ரம் ரத்தோர்
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
