ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சத்தீஸ்கா்: சாலை விபத்தில் 7 போ் உயிரிழப்பு

சத்தீஸ்கா் மாநிலம், பலோட் மாவட்டத்தில் லாரி மீது காா் மோதிய விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2024, 10:07 pm

Din

சத்தீஸ்கா் மாநிலம், பலோட் மாவட்டத்தில் லாரி மீது காா் மோதிய விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். 6 போ் காயமடைந்தனா்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினா் திங்கள்கிழமை கூறியதாவது: படோல் மாவட்டத்தின் டௌண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 13 போ், உறவினா் வீட்டு விழாவுக்குச் சென்றுவிட்டு காரில் சொந்த ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, எதிரே வந்த லாரி மீது காா் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 6 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

காயமடைந்த 5 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சிகிச்சை பலனின்றி ஒருவா் உயிரிழந்தாா்.

இந்த விபத்து தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.

இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த மாநில முதல்வா் விஷ்ணு தேவ் சாய், காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய பிராா்த்திப்பதாக தெரிவித்தாா்.