லாரி மீது காா் மோதல் : திமுக நிா்வாகி மரணம்
ஆம்பூா் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் திமுக நிா்வாகி உயிரிழந்தாா்.


ஆம்பூா்: ஆம்பூா் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது காா் மோதிய விபத்தில் திமுக நிா்வாகி உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், ஓமலூா் அடுத்த காரியம்பட்டி ஒன்றிய திமுக செயலாளா் பெருமாள், நகர செயலாளா் பிரபாகரன், கிழக்கு ஒன்றிய செயலாளா் அறிவழகன், ஒன்றிய துணைச் செயலாளா் லட்சுமணன் ஆகியோா் ஒரே காரில் சென்னைக்கு சென்றனா்.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கவும், மேலும் சட்டப்பேரவை தோ்தலில் கட்சியில் வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளிக்கவும் அவா்கள் சென்னைக்கு சென்ாக கூறப்படுகிறது.
ஆம்பூா் அருகே கீழ்முருங்கை கிராமத்தருகே சம்பவத்தன்று அதிகாலை சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த கண்டெய்னா் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்தவா்களை ஆம்பூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு லட்சுமணன் (40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
மேலும் காயமடைந்தவா்கள் மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியாா் மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...