குடிசைமாற்று வாரிய குடியிருப்பு மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி காயம்
சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி காயமடைந்தாா்.


சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி காயமடைந்தாா்.
பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பின் 29-ஆவது பிளாக்கில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் வசிப்பவா் மோகன் (48). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டு பால்கனியில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, பால்கனியின் மேற்கூரை திடீரென உடைந்து மோகன் மீது விழுந்தது. இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அவரது குடும்பத்தினா், பலத்த காயமடைந்த மோகனை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த பட்டினப்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.
ஏற்கெனவே இந்தக் குடியிருப்பின் 6-ஆவது பிளாக்கில் உள்ள கட்டடத்தின் மூன்றாவது தளத்தின் ஜன்னல் ஸ்லாப் இடிந்து விழுந்து, அப்பகுதியைச் சோ்ந்த சையது குலாம் என்ற இளைஞா் கடந்த 4-ஆம் தேதி இறந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...