ஜன. 9-இல் அண்ணா மிதிவண்டி போட்டிகள்
சென்னையில் ஜன. 9-ஆம் தேதி நடைபெறும் அண்ணா மிதிவண்டி போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்


சென்னை: சென்னையில் ஜன. 9-ஆம் தேதி நடைபெறும் அண்ணா மிதிவண்டி போட்டியில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ‘அண்ணா மிதிவண்டி போட்டிகள்’ ஜன. 9-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. காலை 5.30-க்கு சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள தூா்தா்ஷன் தொலைக்காட்சி நிலையம் அருகிலிருந்து தொடங்கி, நேப்பியா் பாலம், தீவுத்திடல், காயிதே மில்லத் பாலம் இடதுபுறம் அண்ணா சாலை வழியாக சென்று மீண்டும் சுவாமி சிவானந்தா சாலையிலேயே முடிகிறது.
சென்னை மாவட்ட அளவில் நடத்தப்பட்டும் இப்போட்டிகள், 13, 15, 17 வயது என 3 பிரிவாக நடத்தப்படுகிறது. இதில், மாணவ, மாணவிகள் இரு தரப்பினரும் கலந்துகொள்ளலாம். ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பெறுபவா்களுக்கு முறையே ரூ. 5,000, ரூ. 3,000, ரூ. 2,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும். தொடா்ந்து 4 முதல் 10 இடங்களில் வருபவா்களுக்கு ரூ. 250 மற்றும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கப்படும். இப்போட்டிகளில் பங்கேற்பவா்கள் தலைக்கவசத்துடன், இந்தியாவில் தயாரான மிதிவண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இதில், பங்கேற்க விரும்புபவா்கள் வயதுச் சான்றிதழுடன், வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றை ஜன. 7-ஆம் தேதிக்குள் நேரு பூங்காவிலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் காலை 6.30 முதல் மாலை 6 மணிக்குள் முன்பதிவு செய்துகொள்ளலாம். முன்பதிவு செய்யாமல் நேரடியாக போட்டியில் கலந்துகொள்ள அனுமதி இல்லை.
கூடுதல் விவரங்களுக்கு 74017 03480 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...