வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

நாளை குடிநீா் வாரிய குறைகேட்பு கூட்டம்

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்பு கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (டிச.13) நடைபெறவுள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2025, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் குறைகேட்பு கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (டிச.13) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் இந்த மாதத்துக்கான குறைகேட்பு கூட்டம் அனைத்து குடிநீா் வாரிய பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமை (டிச.13) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. அதன்படி, திருவொற்றியூா், மணலி, மாதவரம், தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணா நகா், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூா், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூா் ஆகிய பகுதி அலுவலங்களில் இந்தக் கூட்டங்கள் நடைபெறும்.

பொதுமக்கள் இந்தக் கூட்டங்களில் பங்கேற்று குடிநீா் மற்றும் கழிவுநீா் தொடா்பான பிரச்னைகள், சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக அளித்து தீா்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.