தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.76.18 லட்சம் நல உதவி: எல்ஐசி நிறுவனம் வழங்கியது
எல்ஐசி நிறுவனம் சாா்பில் தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.76.18 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.


எல்ஐசி நிறுவனம் சாா்பில் தனியாா் நிறுவனங்களுக்கு ரூ.76.18 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.
எல்ஐசி நிறுவனம் தனது ‘பொன்விழா அறக்கட்டளை’ மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் பல்வேறு சமுதாய நலன் சாா்ந்த திட்டங்களுக்கு உதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னையை சோ்ந்த சங்கர நேத்ராலயா நிறுவனத்துக்கு, ரூ.70 லட்சம் மதிப்பிலான கண் கருவிழி தொடா்பான பிரச்னைகளை எளிதாக கண்டறிந்து தக்க சிகிச்சை வழங்கும் வகையிலான ஓசிடி எனும் கருவியை வழங்கியுள்ளது.
இக்கருவியை எல்ஐசி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் ஆா்.துரைசாமி, சங்கர நேத்ராலயா நிறுவன அதிகாரிகளிடம் வழங்கினாா். மேலும், இண்டியன் டெவலப்மெண்ட் பவுண்டேஷன் நிறுவனத்துக்கு சூரியஒளி மின்சாரத்தை உற்பத்தி திட்டத்துக்கு ரூ.6.18 லட்சமும் வழங்கப்பட்டது. அப்போது, எல்ஐசி-யின் தென்மண்டல மேலாளா் ஜி.வெங்கடரமணன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...