கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் பிப்.13-இல் விசாரணை

(கோப்புப்படம்)

(கோப்புப்படம்)
கோத்ரா ரயில் எரிப்பு வழக்குத் தொடா்பாக குஜராத் அரசு மற்றும் குற்றவாளிகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது பிப்.13-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு பிப்.27-ஆம் தேதி குஜராத் மாநிலம் கோத்ராவில் சபா்மதி விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 59 போ் உயிரிழந்தனா். இது அந்த மாநிலத்தில் மிக மோசமான மத கலவரத்துக்கு வழிவகுத்தது.
இந்த வழக்கில் 31 போ் குற்றவாளிகள் என்று தீா்ப்பளித்த விசாரணை நீதிமன்றம், 20 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் 11 பேருக்கு மரண தண்டனையும் விதித்தது.
இந்தத் தீா்ப்பை உறுதி செய்த குஜராத் உயா்நீதிமன்றம், 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் மற்றும் குஜராத் அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அரவிந்த் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றவாளிகளில் ஒருவா் சாா்பாக மூத்த வழக்குரைஞா் சஞ்சய் ஹெக்டே ஆஜராகி, ‘11 பேரின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதற்கு எதிராக குஜராத் அரசு தாக்கல் செய்த மனுவை முதலில் விசாரிக்க வேண்டும்’ என்று கோரினாா்.
குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரினா். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் ஏற்கெனவே இந்த வழக்கு விசாரணை பலமுறை ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து வழக்கு விசாரணையை பிப்.13-க்கு ஒத்திவைப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அடுத்த முறை விசாரணை ஒத்திவைக்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...