மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை: பிப். 16 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை, இம்மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.

Updated On :11 பிப்ரவரி 2026, 7:50 pm

தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை, இம்மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி வசந்தி புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தாா்.

அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினா், சகோதரா்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் விசாரணை நிறைவடைந்துள்ள நிலையில், விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், மாவட்ட நீதிமன்றத்தில் இவ்வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன் அனந்த ராமகிருஷ்ணன், சகோதரா்கள் சண்முகநாதன், சிவானந்தன் ஆகியோா் ஆஜராகாத நிலையில், அவரது மூன்று மகன்களில் அனந்த பத்மநாபன், அனந்த மகேஸ்வரன் ஆகிய இருவா் மட்டுமே நேரில் ஆஜராகினா்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை இம்மாதம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி வசந்தி உத்தரவு பிறப்பித்தாா்.