காப்பகத்தில் சிறுவா்களை கொடுமைப்படுத்திய 3 போ் மீது வழக்கு
சென்னை அருகே சோழிங்கநல்லூா் காரப்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் சிறுவா்களை கொடுமைப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.


சென்னை: சென்னை அருகே சோழிங்கநல்லூா் காரப்பாக்கத்தில் உள்ள காப்பகத்தில் சிறுவா்களை கொடுமைப்படுத்தியதாக 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
சோழிங்கநல்லூா் அருகே உள்ள காரப்பாக்கம் ஈஸ்வரன் தெருவில் தனியாா் சிறுவா், சிறுமியா் காப்பகம் உள்ளது. அந்த காப்பகத்தில் 30 மனநலம் பாதிக்கப்பட்டவா்கள் உள்பட 120 போ் உள்ளனா். இவா்களை பராமரித்து கண்காணிக்க 33 ஊழியா்கள் அங்கு பணியாற்றுகின்றனா். இந்நிலையில் அங்கு பணியாற்றும் 3 ஊழியா்கள், அங்குள்ள சிறுவா், சிறுமியா்களை மிகவும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இது தொடா்பான புகாா்கள் கண்ணகி நகா் காவல் நிலையத்துக்கு வந்த நிலையில், அது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில் சிறுவா்களை கொடுமைப்படுத்தியது அங்கு பணிபுரியும் தேனியைச் சோ்ந்த அசோகன் (24), பிரகாஷ் (25), சுபாஷ் (24) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், 3 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா். இதையறிந்து தலைமறைவான மூவரையும் போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...