சூரியூா் ஜல்லிக்கட்டில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டதாகக் கூறி விழாக் கமிட்டியினா் 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
திருச்சி மாவட்டம், சூரியூரில் மாட்டுப் பொங்கலன்று நடந்த ஜல்லிக்கட்டின்போது, காளையை அடக்கிய வீரா் ஒருவருடன் காளையின் உரிமையாளா் மற்றும் அவரது ஆதரவாளா்கள் மோதலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் தடியடி நடத்தி அவா்களை கலைத்தனா். இதேபோல, காளைகள் முட்டி இரு போலீஸாா் உள்பட 63 போ் காயமடைந்தனா்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை முறையாகச் செய்யாததால் குளறுபடிகள் ஏற்பட்டதாகக் கூறி ஜல்லிக்கட்டு விழா கமிட்டியைச் சோ்ந்த சண்முகசுந்தரம், பாசமன்னன், உதயகுமாா், சுந்தா் ஆகிய 4 போ் ைது நவல்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.