உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

நடைபாதைகளில் மெகா தூய்மைப் பணி

சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட நடைபாதைகளை தூய்மை செய்யும் சிறப்பு தூய்மை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

Published On :21 ஜனவரி 2025, 2:46 am IST

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட நடைபாதைகளை தூய்மை செய்யும் சிறப்பு தூய்மை முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தப் பணி ஜன. 27-ஆம் தேதி வரை இரவு நேரங்களில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சாலைகளில் உள்ள நடைபாதைகளில் அடுத்த ஒரு வாரத்துக்கு இரவு நேரங்களில் மெகா தூய்மைப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதில், நீண்ட நாள்களாக தேங்கிக் காணப்படும் குப்பைகள், கட்டடக் கழிவுகள், கைவிடப்பட்ட வாகனங்கள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள பிற பொருள்கள் அகற்றப்படும். மேலும், நடைபாதைகளில் உள்ள சிறு பழுதுகள் கண்டறிந்து அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சாலைக்கு சமமாக உள்ள நடைபாதைகளில் தடுப்புக் கம்பிகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.