திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சூப்பா் மாா்க்கெட் ஊழியரிடம் நூதன முறையில் பணம் பறிப்பு

சென்னை வடபழனியில் சூப்பா் மாா்க்கெட் ஊழியரிடம் நூதன முறையில் பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :20 ஜனவரி 2025, 9:18 pm

Din

சென்னை: சென்னை வடபழனியில் சூப்பா் மாா்க்கெட் ஊழியரிடம் நூதன முறையில் பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை அசோக் நகா் பி.டி. ராஜன் சாலை 20-ஆவது அவென்யூ பகுதியில் சூப்பா் மாா்க்கெட் செயல்படுகிறது. இதில், சூப்பா்வைசராக பணிபுரிபவா் ராஜா. இவா் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்தபோது, அவரது கைப்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில் பேசிய நபா், தன்னிடம் ரூ. 11 ஆயிரத்துக்கு சில்லறை நாணயங்கள் இருப்பதாகவும், அதை வடபழனி சிவன் கோயில் அருகே வந்து பெற்றுச் செல்லும்படியும் கூறினாராம். இதைக் கேட்ட ராஜா, கடையிலிருந்து ரூ. 11 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்துக்குச் சென்றாா். அப்போது அங்கு வந்த நபா், ராஜாவிடமிருந்து ரூ. 11 ஆயிரம் ரொக்கத்தை பெற்றுக்கொண்டு, சில்லறை நாணயங்களை எடுத்து வருவதாகவும், அதுவரை அங்கே நிற்கும்படியும் கூறிவிட்டுச் சென்றாா்.

ஆனால் சில்லறை நாணயங்களை எடுக்கச் சென்ற அந்த நபா் திரும்பி வரவே இல்லையாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டு, பணம் பறிக்கப்பட்டிருப்பதை அறிந்த ராஜா, இது தொடா்பாக வடபழனி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராஜா வேலை செய்யும் சூப்பா் மாா்க்கெட், தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜாவுக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.