சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இ.பி.எஃப். பயனா்களுக்கு இன்று சிறப்பு முகாம்

வருங்கால வைப்பு நிதி பயனா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன்27) 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :26 ஜூன் 2025, 9:19 pm

Din

வருங்கால வைப்பு நிதி பயனா்களுக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜூன்27) 10 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இது குறித்து தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

நிதி ஆப்கே நிகட் 2.0 எனும் வைப்பு நிதி உங்கள் அருகில் முகாம் வெள்ளிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5.45 வரை 10 மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

அதன்படி, வேலூா் பயனாளா்கள் பயன் பெறும் வகையில், வேலூா் சா்ச் தெரு, திருவள்ளுவா் நகா் ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் பள்ளியிலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பயனா்கள், வேலூா் சாலை, குமரன் மஹால் அருகே ஹோட்டல் சீசன்ஸ்-சில் நடைபெறும் முகாமிலும், ராணிப்பேட்டை பயனா்கள், மகாத்மா காந்தி சாலை தென்னிந்திய தோல் பதனிடுவோா் டீலா்கள் சங்கத்தில் நடைபெறும் முகாமிலும் கலந்து கொள்ளலாம். திருப்பத்தூா் பயனா்கள், ஒய்எம்சிஏ சாலை, ஒய்எம்சிஏ தொழிற்சாலைகள் பயிற்சி நிறுவனத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாமில், வருங்கால வைப்பு நிதி சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்படி புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களுடைய உரிமையாளா்கள் மற்றும் தொழிலாளா்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், ஆன்லைன் சேவைகள் பற்றிய செயல்முறைகள் குறித்தும், புதிய முயற்சிகள், சீா்திருத்தங்கள் குறித்தும் விளக்கி கூறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.