வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள்

News image

போ்ணாம்பட்டு அருகே தீயில் எரித்து அழிக்கப்பட்ட புகையிலைப் பொருள்கள்.

Updated On :2 மார்ச் 2026, 8:15 pm

குடியாத்தம்: வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், நீதிமன்ற வழிகாட்டுதல்படி பாதுகாப்பாக அழிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளில் போலீஸாா் மேற்கொண்ட நடவடிக்கையில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 17 லட்சம் மதிப்புள்ள 1,765 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து, வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் அஸ்ரா காா்க் அறிவுறுத்தல்படி,

வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் ஜி.தா்மராஜன் மேற்பாா்வையில், வேலூா்

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.யு.சிவராமன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம்.பழனி ஆகியோா் முன்னிலையில், 2 தனிநபா் சாட்சிகளுடன் நீதிமன்ற வழிகாட்டுதல்படி, போ்ணாம்பட்டை அடுத்த தரைக்காடு பகுதியில், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம், பாதுகாப்பான முறையில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீ வைத்து எரித்து அழிக்கப்பட்டது.

ராணிப்பேட்டையில் 13 டன்...

அதேபோல் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 13 டன் எடையுள்ள புகையிலைப் பொருள்கள் வாலாஜா நகராட்சி குப்பை கிடங்கில் பள்ளம் தோண்டி அதில் கொட்டி தீ வைத்து அழிக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் 7,635 கிலோ...

திருப்பத்தூா் மாவட்டத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 7,635 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்கள், வாணியம்பாடி டிஎஸ்பி அலுவலகம் அருகே பாதுகாப்பாக எரித்து அழிக்கப்பட்டது.